உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பொருளாதார வீழ்ச்சிக்கு முழுப் பொய்களே காரணம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தொடர்ச்சியாகப் பொய்களைக் கூறி வருவதன் காரணமாகவே இலங்கையின் பொருளாதாரம் இன்று பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசும் அதே பொய்ப் பிரசாரங்களைத் தொடர்வதால், ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்த பொருளாதாரம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது என்றும் அவர் சாடினார்.

கொழும்பில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கை வரலாற்றில் அதிகளவு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்த அரசாக தற்போதைய ஆட்சி மாறியுள்ளது. கடந்த 78 வருட கால வரலாற்றில் நாட்டை நிர்வகித்த கட்சிகள் சில பணிகளைச் செய்திருந்தாலும், தனிப்பட்ட பதவி ஆசைகளுக்காக மக்களை ஏமாற்றி, பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ளனர். இனியாவது பொய் சொல்வதை நிறுத்துவதே இவர்கள் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.

கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பொறுப்பேற்ற போதெல்லாம் முறையான இலக்குகளுடனேயே செயற்பட்டார். நெருக்கடியான காலகட்டத்திலும் கூட எரிபொருள் விலைகள் மக்களால் தாங்கிக் கொள்ளக் கூடிய வகையில் முகாமைத்துவம் செய்யப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

தற்போதைய அரசின் கீழ் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்ந்து செல்கின்றன. கடந்த 2024 செப்டெம்பரில் ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஒப்படைக்கும் போது 344 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் பெற்றோல் இன்று 398 ரூபாவாகவும், 2 ஆயிரத்து 892 ரூபாவாக இருந்த எரிவாயுவின் விலை 4 ஆயிரத்து 765 ரூபாவாகவும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

அரசியல்வாதிகள் தொடர்ந்தும் பொய்களைக் கூறி நாட்டை நிர்வகித்தால், இலங்கை மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அரசின் திட்டமிடப்படாத மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பயணத்தால், மிக விரைவில் இந்த ஆட்சி பாரிய பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும்.” – என்றும் வஜிர அபேவர்தன எச்சரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

52 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

59 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

52 0 0