உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வெடுக்குநாறிமலை பௌத்தத்துக்குரியது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

“வவுனியா, வெடுக்குநாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மதத்துக்கு உரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“வெடுக்குநாறி மலையில் காணப்படும் நினைவுச்சின்னங்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இது கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை கல்வெட்டுகள் மூலம் அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில சட்டவிரோத கட்டுமானங்கள், அங்கிருக்கும் தொல்பொருள் நிலப்பரப்புக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொல்பொருட்களுக்குச் சேதம் விளைவிப்பது மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை எழுப்புவது தொடர்பாகத் தொல்பொருள் திணைக்களம் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின்படி, வரலாற்றுச் சின்னங்களைச் சிதைப்பது, இடம் மாற்றுவது அல்லது மாற்றுவது ஆகியவை கடுமையான சட்டமீறல்களாகக் கருதப்படும்.

குறிப்பிட்ட அந்த இடத்தில் எவரேனும் மத வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், அவ்வாறு வழிபாடுகளில் ஈடுபடும்போது அங்கிருக்கும் தொல்பொருட்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

வெடுக்குநாறிமலையின் வரலாற்றுப் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில், அதனைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பதற்கான வர்த்தமானி வெளியீடு மிக விரைவில் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0