உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மஸ்கெலியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டு விழா நேற்று நடைபெற்றது.

இந் நிகழ்வு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார தலைமையில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று 08.04.2026 அன்று இடம்பெற்றது.

நிகழ்வில் மவுஸ்சாகலை சந்தியில் இருந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் வரை 04 கிலோ மீட்டர் தூரம் மரதன் ஓட்ட போட்டி, சட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த 2026 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0