மின்னல் தாக்கி யுவதி ஒருவர் உயிரிழப்பு.!
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபனாகல பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மழை பெய்து கொண்டிருந்த வேளையில், வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்குக் குடையைக் கொடுத்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காகச் சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின்னல் தாக்கியதில் குறித்த யுவதி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த யுவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.