ஹட்டன் நகரை சுத்தப்படுத்தும் நடவடிக்கை.!
ஹட்டன் நகரசபை அதிகாரிகள் மற்றும் நகரசபை ஊழியர்கள் இணைந்து, இன்று 8 ஆம் திகதி ஹட்டன் நகரில் விரிவான சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நகரின் பல பகுதிகளில் காணப்பட்ட அசுத்தமான ஓடைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சூழல் சுத்தமாக மாற்றப்பட்டது.
இந்த நடவடிக்கை மூலம், நகரின் சுகாதார நிலை மேம்படுவதுடன், நோய் பரவலைத் தடுக்கவும் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுத்தமான ஹட்டன் – ஆரோக்கியமான சமூகத்திற்கான அடித்தளம் என்ற நோக்கில், நகரசபை தொடர்ந்து இத்தகைய பணிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களும் நகரை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என நகரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.




