உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மத்திய கிழக்கின் அமைதியே இலங்கையின் எதிர்பார்ப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வந்து விரைவில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் குறித்துத் தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். போரில் சம்பந்தப்படாத நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகைய தாக்குதல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவிலான இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போதைய போர்ச் சூழலுக்கு மத்தியில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையின் வலுசக்தித் தேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறைக்கு அரபு நாடுகள் வழங்கி வரும் பங்களிப்பை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார். அத்துடன், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை வழங்கக்கூடிய அதிகப்பட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, ஓமான், எகிப்து, பலஸ்தீனம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், ஈராக், குவைத், லிபியா ஆகிய நாடுகளின் தூதரகப் பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அமைச்சர்களான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0