உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (8) கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி பந்து எதிரிசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், பொதுமக்களுக்கு மேம்பட்ட மற்றும் சௌகரியமான பேருந்து நிலைய வசதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், பேருந்து நிலையக் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டதுடன், புதிய தகவல் மையம் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல், சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளுக்காக இலங்கை விமானப்படை தனது பங்களிப்பை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்களுடன் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ள இந்த மத்திய பேருந்து நிலையம், தினசரி பயணிகளுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0