உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“சமூகங்களை இணைத்தல் அமைதியை கட்டி எழுப்புதல் – மட்டக்களப்பில் இளைஞர் மற்றும் மகளிர் தலைமைத்துவத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்துதல்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும் UNOPS மற்றும் விரித்தி அமைப்பின் பங்களிப்பிலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி திட்டங்களும், வறுமைக்கோட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராவோடை மற்றும் மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் அஜானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குறித்த பிரதேசங்களின் கிராம சேவையாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இளம் பெண்ணிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையிலும் அமைதியான முறையில் ஒற்றுமையுடன் வாழும் சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது மீராவோடை, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் வகையில் தொழில் முயற்சிகளை முன்னெடுக்கும் பெண்களை மேம்படுத்தும் வகையில் 15 பெண்களுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் மாஞ்சோலை பகுதியில் பாடசாலை இடைவிலகலை தடுக்கும் வகையில் வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0