உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (7) யாழ். நீதிவான் லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜராகி இருந்ததுடன் இந்த மனிதப் புதைகுழி தொடர்பிலான அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன் நீதிமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தலைமையிலான குழுவினர் ஆஜரானதுடன் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி பூரணி ஆஜராகி இருந்தார்.

இதன்போது நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியுமான சூழல் இருப்பதாக அவர் இதன்போது நீதிமன்றில் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குறித்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்ட செலவீனங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ். நீதிவான் லெனின் குமார் நீதி அமைச்சுக்கு இது தொடர்பில் ஞாபகமூட்டும் கடிதம் ஒன்றினை அனுப்ப உடனடியாக உத்தரவிட்டார்.

எதிர்வரும் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பாதீட்டுக்கு அனுமதி கிடைக்காத நிலையில் அவ்வாறான அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தற்போது சந்தேகம் நிலவுகிறது.

எனினும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பாதீட்டுக்கு அனுமதி பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் மீண்டும் ஒருமுறை ஆராய இந்த வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைக்குமாறு நீதிவான் லெனின் குமார் உத்தரவிட்டார்.

இதன்போது காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூரணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் செம்மணி மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிட அனுமதி கோரியுள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டு அதற்காக அனுமதி கோரினார்.

இது தொடர்பாக கவனம் செலுத்திய நீதிவான் லெனின் குமார் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு முதலோ அல்லது அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகோ குறித்த வளாகத்தை பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான அதிகாரிகள் இதுவரை முன்னெடுத்த விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றில் சமர்ப்பித்து செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட வழக்கு பொருட்களின் கால நிர்ணயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு கட்டளை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரினர்.

இது தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பித்திருந்த நிலையில் அது தொடர்பில் அவதானம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுவரையில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக மேலதிக ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான செலவீனங்கள் குறித்த பாதீட்டுக்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்ற விடயம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் திருத்தப்பட்ட பாதீடு ஒன்றை அது தொடர்பில் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்வைத்து அதற்கு அனுமதி கோரினார். இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ். நீதிவான் லெனின் குமார் அந்த பாதீட்டுக்கும் அனுமதி அளித்தார்.

இந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை தீர்மானிப்பது தொடர்பான விடயத்துக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0