உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கிளிநொச்சியில் அதிகரித்த குரங்குகளின் அட்டகாசம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கிளிநொச்சி – பூநகரி ஜெயாபுரம் கிராமத்தில் அதிகரித்துள்ள குரங்கு மற்றும் காட்டு யானை தொல்லைகளால் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஜெயாபுரம் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை மற்றும் குரங்குகளின் தொல்லை என்றுமில்லாவாறு அதிகரித்துக் காணப்படுகின்றன.
இவ்வாறு, காட்டு யானை மற்றும் குரங்கு தொல்லை காரணமாக தமது வாழ்வாதாரமான விவசாய செய்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அதாவது, குறித்த கிராமத்தில் உள்ள கூடுதலானவர்கள் விவசாயத்தை தங்களுடைய வாழ்வாதார தொழிலாக கொண்டு வாழ்ந்து வரும் இவ்வாறான நிலையில் இரவு வேலைகளில் காட்டு யானைகளின் தொல்லையும் பகல் வேளைகளில் குரங்குகளின் தொல்லையும் அதிகரித்து காணப்படுகின்றன.

இது போன்று காட்டு யானை, குரங்கு மற்றும் ஏனைய விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதனால் தனது வாழ்வாதாரம் முற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0