உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இந்திய படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச உடைமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தால் இன்று இந்த ஏல விற்பனை முன்னெடுக்கப்பட்டது.

நீண்டகாலமாகத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் படகுகளுக்குச் சொந்தமான பல்வேறு பொருட்கள் இதன்போது ஏலம் விடப்பட்டன.

இந்திய மீனவர்களின் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புக்கள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டன.

இந்த ஏல விற்பனையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கேள்வி கோரல்களை முன்வைத்துத் தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

அரச உடமையாக்கப்பட்ட இந்தப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கணிசமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0