உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அரிசி, எரிவாயு விலையேற்றத்தால் மக்கள் நெருக்கடியில்; புத்தாண்டுக்கு முன் நிவாரணம் வழங்குக.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“அரிசி, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். எனவே, தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்” என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக வலியுறுத்தினார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நாடாளுமன்றம் கூடிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் நாட்களில் தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறான பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக அரிசி, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான விலைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழலில் அரசாங்கம் மௌனம் காக்கக் கூடாது. நாட்டு மக்களின் பக்கம் நின்று சிந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களுக்குக் சலுகை விலையில் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.” – என்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0