உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பிரதமர் தலைமையில் கூடியது தேசிய கல்விச் சீர்திருத்தக் குழு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவின் தலைமையில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்தக் குழு, ஒட்டுமொத்த கல்விச் சீர்திருத்த செயல்முறையின் அனைத்து அம்சங்களையும் முறையாக ஒழுங்குபடுத்தி, உயர்தரமான கல்விச் சூழலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க இக்குழுவின் தலைவராகச் செயற்படுவதுடன், இதில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விப் புலமைசார் நிபுணர்கள் பலரும் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

அத்துடன், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சமூகப் பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை அரச ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பிரதான ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மேலதிக செயலாளர் (கல்விச் சீர்திருத்தம்) எம். ஏ. வி. எஸ். எதிரிசூரிய இக்குழுவின் அழைப்பாளராகக் கடமையாற்றுகிறார்.

கல்விச் சீர்திருத்தத்திற்குச் சொந்தமான ஐந்து பிரதான தூண்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆராய்ந்து, அவற்றைச் சரியான திசையில் வழிநடத்துவதும், எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்களுக்குத் தீர்வுகளை முன்வைப்பதும் இந்தக் குழுவின் பிரதான நோக்கமாகும்.

இக்கூட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,
மனிதவள அபிவிருத்தி, கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகம், கலைத்திட்ட அபிவிருத்தி, மதிப்பீடு மற்றும் தரம் பார்த்தல், சமூக விழிப்புணர்வு ஆகிய ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கிய வகையில் விசேட துணைக் குழுக்கள் கூட்டப்படவுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சீர்திருத்த பொறிமுறையை வலுப்படுத்தி, அதற்கான சமூக அங்கீகாரத்தை உயர்த்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான வைத்தியர் மதுர செனவிரத்ன, நளின் ஹேவகே உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0