உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஐம்பது கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

டுபாயிலிருந்து படுக்கை விரிப்புகள் எனப் பொய்யாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 33 இலட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இலங்கைச் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சந்தேகத்துக்கிடமான கொள்கலன் ஒன்றைச் சுங்கப் பிரிவினர் அண்மையில் விசேட சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே, இவ்வளவு பெரிய அளவிலான சிகரெட் தொகை பிடிபட்டது.

இறக்குமதி ஆவணங்களில் குறித்த கொள்கலனில் “படுக்கை விரிப்புகள்” இருப்பதாகப் பொய்யாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க வரி மற்றும் சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான திட்டமிட்ட ஏமாற்று வேலையில் கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்தப் பெறுமதி சுமார் 50 கோடி 70 இலட்சம் ரூபா என சுங்கப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சட்டவிரோத இறக்குமதி காரணமாக அரசுக்குச் சேர வேண்டிய சுமார் 46 கோடி ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறித்த கொள்கலனானது பத்தரமுல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முகவரிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சுங்கப் பிரிவினர் முடுக்கிவிட்டுள்ளதுடன், கடத்தலுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0