யாழில் வாள்களுடன் சிக்கிய இளைஞன்.!
ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இளைஞனை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்த இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டுதலின் கீழ் பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.