உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவு மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்காக மக்கள் அதிகளவில் இணையதளங்களை பயன்படுத்துகின்றனர்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் மோசடிக்காரர்கள், தரவுகளைத் திருடி பணத்தை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, கவர்ச்சிகரமான புத்தாண்டு சலுகைகள் மற்றும் பரிசுகள் தொடர்பான போலி அறிவிப்புகள், போலியான வங்கி இணையதளங்கள் மற்றும் வங்கி செயலிகளைப் புதுப்பிக்குமாறு கோரும் செய்திகள், போலியான கியூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யத் தூண்டுதல், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் என்பன குறித்து அவதானமாக செயற்படவும்.


இவ்வாறான மோசடிகள் ஊடாக தனிப்பட்ட தரவுகளைப் பெற்று, வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை திருடும் அபாயம் உள்ளது.எனவே, இணையதளம் ஊடாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போதும், அறிமுகமில்லாத இணைய இணைப்புகளை அழுத்தும் போதும் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

83 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0