உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் இந்த வாரம் மூன்று நாட்களுக்குக் கூடவுள்ளது. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை காரணமாக நாளைமறுதினம் புதன்கிழமை சபை அமர்வு நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.

அத்தோடு எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகள் மற்றும் புதிய வெளிப்பாடுகள் குறித்து இந்த விவாதத்தின் போது விரிவாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

83 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0