உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

செட்டிகுளம் முசல்குத்தியில் மக்களின் காணிகளில் எல்லைக்கற்கள் இட்டு வனவளத் திணைக்களம் அடாவடி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முசல்குத்தி பகுதியில் வனவளத் திணைக்களத்தினால் அடாத்தாக எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள, கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (06.04.2026) நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் சகிதம் பார்வையிட்டிருந்தார்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் அண்மையில் காணி மற்றும் வனவள அமைச்சர் பங்குபற்றிய கூட்டம் ஆகியவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலைப்படுத்தியிருந்தார். அரச அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் கூட அறிவித்தல் வழங்காமல் இந்த காணிகள் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

காணிகளை பார்வையிட்ட பின்னர் கருத்துதெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பில் அரசாங்க அதிபர், வனவளத் திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் மீளவும் கலந்துரையாடுவதாக தெரிவித்தார். அத்துடன் காணி மற்றும் வனவள அமைச்சரை விரைவில் கொழும்பில் சந்தித்து இது தொடர்பில் முறையிடவுள்ளதாகவும், காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0