உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஐக்கிய தேசியக் கட்சியே எமது தாய் வீடு; வங்குரோத்துத் தரப்புடன் கூட்டணியில்லை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைந்து செயற்படும். நாட்டை வங்குரோத்தடையச் செய்த தரப்பினருடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தின் மூலம் விளக்கினார்.

“நானும் ஒரு பெண்ணும் காதலிப்பதாக வைத்துக்கொள்வோம். தந்தை அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொள்கின்றோம். பின்னர் தந்தை நோய்வாய்ப்படும்போது, அவரைப் பார்ப்பதற்காக எமது தாய் வீட்டுக்கு வருகின்றோம். அங்கே எம்மால் தங்கியிருக்க முடியும் அல்லவா?” என்று கேள்வி எழுப்பிய அவர், இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியே தங்களின் ஆரம்ப ‘தாய் வீடு’ என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பாதிப்புக்குள்ளாக்கிய இவ்வாறான தரப்பினருடன் எம்மால் எவ்வாறு கூட்டணி அமைக்க முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வலதுசாரி அரசியல் கலாசாரத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்று தெரிவித்த அவர், தமது அரசியல் கொள்கையுடன் ஒத்துப்போகும் தரப்புகளுடன் மாத்திரமே எதிர்காலத்தில் இணைந்து பயணிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் விளக்கமளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

83 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0