உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நீதித்துறையில் அரசு தலையிடவில்லை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

அரசாங்கம் நீதித்துறையின் தற்போதைய கட்டமைப்பில் தலையிடவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் அடியோடு மறுத்தார்.

“அமைச்சரவையில் இது தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை. எனவே, அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை” என்றும் அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு அரசமைப்பின் 12 (1) உறுப்புரையை மீறும் செயல் என்று தெரிவித்திருந்தனர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கோட்பாட்டுக்கு இது முரணானது என்றும் அவர்கள் வாதிட்டிருந்தனர்.

இலங்கை அரசமைப்பின் 107 ஆவது உறுப்புரையின் கீழ், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலம் மற்றும் சுதந்திரம் தொடர்பான பாதுகாப்புகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசமைப்பின் 107 (5) உறுப்புரையின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகும்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணுவதற்காக இந்த வயது எல்லைகள் அரசமைப்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

இதில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்வதாயின், அதற்கு முறையான அரசமைப்பு திருத்தம் அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் அத்தகைய எந்தவொரு நகர்வையும் அரசு முன்னெடுக்கவில்லை என்று நீதி அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

83 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0