உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சுமார் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

இவர் இன்று காலை 06.50 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஏஐ-277 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருள் அடங்கிய பயணப் பொதியை விமான நிலையத்தின் பொதி வழங்கும் பகுதியில் கைவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, சுங்க அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது, பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோகிராம் 340 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0