வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் புதிய பிரதேசக்கிளை காரியாலயம் திறப்பு.!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா – வெங்கலச்செட்டிகுளம் பிரதேசக்கிளை காரியாலயம் மற்றும் மக்கள் தொடர்பகம் இன்று (06.04.2026) மன்னார்-மதவாச்சி வீதி, வாகைகட்டிய ஒலுக்குளம், செட்டிகுளம் இடத்தில், கட்சியின் வவுனியா மாவட்டக்கிளையின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபையின் தலைவர் முகம்மட் இம்தியாஸ், முன்னாள் வவுனியா மாநகர பிரதிமுதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன், பிரதேசசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர், பிரதேச இணைப்பாளர் மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.