எரிசக்தி நெருக்கடி கட்டுப்பாட்டில் – அமைச்சர் விஜித ஹேரத்.!
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்து சேரும் என தெரிவித்துள்ளார்.
மாத்தையில் நடைபெற்ற 55 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்தம் நிகழ்வில் உரையாற்றிய அவர், எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் ஏற்கனவே சமாளித்துள்ளதாக கூறினார்.
தட்டுப்பாடுகளை சமாளிக்க க்யூஆர் அடிப்படையிலான எரிபொருள் விநியோகம், ஒற்றை-இரட்டை எண் முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை போன்ற தற்காலிக நடவடிக்கைகள் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.தற்போது எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளதுடன், க்யூஆர் முறை திறம்பட செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், விநியோக நிலைமை மேம்பட்டால் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், புதன்கிழமை விடுமுறையும் திரும்பப் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.எரிபொருள் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் உறுதியளித்தார்.