கிரகரி வாவியில் மர்ம சடலம் மீட்பு.!
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (06) காலை வாவியில் படகு சவாரியில் ஈடுபட்டிருந்தவர்கள் சடலம் மிதப்பதை கவனித்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர், சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வாவியில் வீசப்பட்டாரா என்பது குறித்து பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், மரண விசாரணைகளுக்குப் பின்னர் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.