உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சுழற்றியடித்த காற்றால் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்த மீனவர்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

புத்தளம் – உடப்பு பகுதியில் இன்று அதிகாலை திடீரென வீசிய தென்மேல் பருவக்காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதிகாலை வழமைபோல் கடலுக்குச் செல்லத் தயாரான மீனவர்கள், காற்றின் வேகம் அதிகரித்ததை அடுத்து பயணத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இயந்திரப் படகுகள், தெப்பங்கள் மற்றும் கரைவலைத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனிடையே, காங்கேசன்துறை முதல் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை கடல் பிராந்தியங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்றும், சில கடல் பகுதிகளில் இது 40 முதல் 45 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல் பயணிகள் அவதானத்துடன் செயல்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.


மேலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0