சட்டவிரோத டீசல் சேமிப்பு: இருவர் கைது.!
உரிமம் இன்றி சட்டவிரோதமாக டீசலை சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு பிரிவு குற்றப்பிரிவினரால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தை பகுதியில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றன.
சோதனையின் போது 826 லிட்டர் டீசலும், அங்கீகரிக்கப்படாத எரிபொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 72,210 ரூபாயும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளவத்தை மற்றும் வரியபொல பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 61 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பு பிரிவு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.