உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் போக்குவரத்து விதிகளை மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பண்டிகைக் காலத்தில் வீதியோரங்களிலுள்ள ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்களுக்கு வருகை தரும் நுகர்வோரினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குப் போதுமான வாகன தரிப்பிட வசதிகளை வழங்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.வீதியோரங்களில் முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்துத் தடைகளைத் தவிர்க்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீதி ஒழுங்குமுறைகளை மீறுவோர், குறிப்பாக வாகன தரிப்பிட விதிகளைப் புறக்கணித்து வீதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டத்தை நிலைநாட்டுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0