உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ரஷ்யா பயணம் மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் உள்ளிட்ட அவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காகவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.


இதற்குமுன் ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ மற்றும் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் ஆகியோர் கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்து, ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தினர்.


அந்தச் சந்திப்புகளின் தொடர்ச்சியாகவே விஜித ஹேரத்தின் இந்த ரஷ்யப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளதும் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குசாதகமான சூழ்நிலையாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0