வந்து குவியவுள்ள எரிபொருள் கப்பல்கள் : அரச ஊழியர்களின் விடுமுறையில் ஏற்படப்போகும் மாற்றம்!
ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் எனவே அரச ஊழியர்களின் புதன்கிழமை விடுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியினால் இன்று ஏப்ரல் 05 ஆம் திகதி மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழலால் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
எனவே, விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமையை மீண்டும் வேலை நாளாக மாற்றுவதற்கும், QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க முறைமைகளை நீக்கி நிலைமையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் கூறினார்.