சாந்திபுரத்தில் வனத்துக்கு சென்ற வயோதிப பெண்ணை காணவில்லை…! நடந்த மர்மம் என்ன ..?
கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அன்று, நுவரெலியா, சாந்திபுர, 304 A/3 பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆர். தங்கம்மா என்பவர், காலை சுமார் 11.30 மணியளவில் வீட்டின் பின்புறம் உள்ள வனப் பகுதிக்குச் சென்றுள்ளார். மாலை3.00 மணியளவில், அவர் காட்டில் வழி தவறி விட்டதாகவும், வழி தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
அப்போது, அவரது பேத்தி தனது சகோதரிடம் இதைப் பற்றிக் கூறிவிட்டு, அவரைத் தேடி வனதிற்கு சென்றார், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து நுவரெலியா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டநிலையில் . காவல்துறையினர் , இராணுவத்தினர் , கிராம மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தேடிவருகின்றனர், ஆனால் அவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
இங்கு காட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் வனத்திற்கு சென்று வழி தவறி உள்ள நிலையில் இந்த வயோதிப பெண்ணை யாரேனும் பார்த்திருந்தால், உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.
தொலைபேசி இலக்கம் 0775364391