உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ரயிலில் மோதி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில், சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஐ.ஆர். அசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் திருமணமாகாதவர் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று (04) இரவு தண்டவாளத்தில் நடந்து சென்றவரை, திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதியுள்ளது.

வென்ராசன்புரயில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு தண்டவாளம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த கந்தளாய் குற்றப் புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0