உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சொத்து விபரப் பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ளதைக் குறிப்பிட்ட ஆணைக்குழு, ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு மேல் மேலதிக காலம் வழங்கப்படமாட்டாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர, ஏனைய பல முக்கிய அரசியல்வாதிகளுக்கும் கடந்த வியாழக்கிழமை (03) இவ்வாறான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் 12 நாட்களுக்குள் தமது சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

குறித்த காலப்பகுதிக்குள் விபரங்களை வழங்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0