உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நெடுந்தீவுக்கான படகுச்சேவை தற்போது தனியார் கையில்; கைவிட்டது வீதி அபிவிருத்தி அதிகாரசபை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03/04) தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் இவ்வாறான நிலையே தொடர்கின்றது.

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் ஒன்றான குமுதினி படகு திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை.

இதேவேளை வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையில், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் என பயணிகள் சேவையில் இருந்து முற்றாக அரச படகுகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு தீவு மக்களை தவிக்கவிட்டுள்ளனர்.

தனியார் படகான கரிகணன் படகே தற்போது பயணிகள் சேவையில் இணைந்து கொண்டதுடன் இதன் காரணமாக வழமையான அதன் மு.ப.11.30 மணி சேவையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் மு.ப.11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

படகு சேவைகள் தொடர்பாக உரிய திட்டமிடல் இன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் செயற்பட்டு வருவதுடன் பயணிகள் சேவைக்காக மாற்று ஏற்பாடுகள் செய்வது தொடர்பிலும் அக்கறை இன்றி இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0