உந்துருளி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!
தெஹியத்தக்கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (04) இரவு, உந்துருளி ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் சிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பொலன்னறுவை நோக்கி பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளி ஓட்டுனர், தெஹியத்தக்கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தக்கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.