உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
17 பார்வைகள்

வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 9ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான ஆசன முன்பதிவுகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால், புகையிரதக் கடவைகளைக் கடப்பவர்கள் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0