உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு ஆளுனருக்குமிடையில் சந்திப்பு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்யஞ்சல் பாண்டே, கிழக்கு மாகாணத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தின் போது, பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவை திருகோணமலையில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.இந்தச் சந்திப்பின் போது, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், அந்தத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்கும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக மேம்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும்வலியுறுத்தப்பட்டது.


அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த எதிர்காலத்தில் பல்வேறு பெரிய அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெற இந்தச் சந்திப்பு முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0