புதைக்கப்பட்ட சடலத்தின் தலையை அகற்றி சென்ற மர்மம் – வவுனியாவில் பரபரப்பு சம்பவம்.!
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தின் தலையை இனம் தெரியாத நபர்கள் அகற்றி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம், மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதைக்கப்பட்ட இடம் மீண்டும் தோண்டப்பட்டு, சடலத்தின் தலையைக் காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.அதே பகுதியில் அண்மையில் நடைபெற்ற இறுதிச்சடங்கின் போது துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் மேற்கொண்ட பார்வையிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.