கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டம் – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை.!
பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குக் கடிதம் அனுப்பி தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்ததாவது, தங்களது கோரிக்கைகளுக்கு நாளை மறுநாளுக்குள் உரிய பதில் கிடைக்காவிட்டால், பெற்றோலியக் கழகம், அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.