உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

“பிரஜாசக்தி 2026” வீடமைப்பு திட்டம்: அட்டாளைச்சேனையில் பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலை வழங்கல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“தமக்கானதோர் இடம் – அழகான வாழ்க்கை” எனும் அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான வீடுகளுக்கான முதற்கட்ட காசோலைகள் நேற்று (03) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டன.


ஒவ்வொரு வீட்டிற்கும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 150,000 ரூபாய் காசோலைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

மேலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அப்கார், கணக்காளர் எப்.எம். பர்ஹான், தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சத்தார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0