உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஹட்டனில் நவீன சுற்றுலா பேருந்து சேவை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து நிலையத்தால் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட சுற்றுலா பேருந்து ஒன்று எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பொதுச் சேவையில் இணைக்கப்பட உள்ளது.


இதனை ஹட்டன் பேருந்து நிலைய மேலாளர் எம். பாலித பண்டாரா தெரிவித்துள்ளார்.ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரத்மலானை பணிமனையிலிருந்து பெறப்பட்ட பழைய பேருந்தொன்று சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 42 இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


பேருந்து செயல்பாட்டிற்கு முன்பாக அதில் ஸ்டுடியோ ஒலி அமைப்பு, குளிர்சாதன வசதி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் பொருத்தப்பட உள்ளன.மத்திய மாகாணத்தில் உள்ள ஹட்டன் அரச பேருந்து பணிமனையில்உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பயன்பாட்டிற்கு விடப்பட உள்ளது.


மேலும், இந்த சேவைக்காக புதிய சீருடை அணிந்த சாரதி மற்றும் நடத்துநர் நியமிக்கப்பட உள்ளதாகவும், தேவையுடையோர் ஹட்டன் பேருந்து நிலையத்தில் பதிவு செய்து எந்த நேரத்திலும் இந்தப் பேருந்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0