உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம்: மன்னார் வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.இன்றைய தினம் (4) நடைபெற்ற இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியர்களும் இணைந்ததால், அவர்கள் கடமையில் ஈடுபடாத நிலை ஏற்பட்டது.


இதன் விளைவாக, மருந்து வழங்கல் மற்றும் ஊசி செலுத்துதல் போன்ற குறைந்தளவிலான சேவைகள் மட்டுமே இடம்பெற்றதுடன், அவசர நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.மற்றைய அனைத்து மருத்துவ சேவைகளும் இடம்பெறாத காரணத்தால், சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

தூர இடங்களில் இருந்து வந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டதுடன், வைத்தியர்களின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0