சாய்ந்தமருதில் உணவகங்கள், வீதியோர விற்பனை நிலையங்கள் மீது திடீர் சோதனை.!
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று சுகாதார அதிகாரிகளினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.இந்தச் சோதனைகளின் போது நுகர்விற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகள் கண்டறியப்பட்டதுடன், அவை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும், விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது முக்கியப் பொறுப்பாக இருப்பதால், இத்தகைய பரிசோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சாய்ந்தமருதுசுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலிலும், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் முன்னோடித் திட்டமிடலின் கீழும் மேற்கொள்ளப்பட்டன.
