கந்தளாயில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராற்றுப் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.உயிரிழந்தவர் பேராற்றுவெலி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.
இவர் இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அந்த இடத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
விபத்தையடுத்து பிரதேசவாசிகளும் இளைஞர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்இதன்போது, அவர் நீராடச் சென்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.