உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கையில் துருக்கி நாட்டு பெண்ணுக்கு நடந்த கொடூரம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மாத்தறை – வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதுதொடர்பில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகமவிலுள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த 31 வயதுடைய துருக்கி நாட்டுப் பெண்ணே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இரண்டு சுற்றுலா வழிகாட்டிகளும் அந்தப் பெண்ணுடன் ஒரு மதுபானகத்துக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

அதன் பின்னரே அவர்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சுற்றுலா வழிகாட்டிகள், அந்தப் பெண்ணின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி அவரது கணக்கிலிருந்து 114,000 ரூபா பணத்தையும் திருடியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0