உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சிறைகளில் கைதிகள் அதிகரிப்பால் அதிகாரிகளின் பணிசுமை உயர்வு – அமைச்சர் எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாட்டில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பணிசுமையும் பலமடங்காக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.


மேலும், நாட்டில் தொற்றாநோய்கள் பாரிய சுகாதார சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதம் தொற்றாநோய்களால் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் மக்களில் சுமார் 25 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தாலும், 30 முதல் 33 சதவீதம் வரை நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், நாள்தோறும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


தற்போது 36 சிறைச்சாலைகளில் சுமார் 33,500 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 6,000 உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0