உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கையிலுள்ள முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு புனர்வாழ் வளிக்காவிடின் மீண்டும் குண்டு வெடிக்கும் ! கம்மன்பில எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கையுடையவர்களுக்கு முறையான புனர்வாழ்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் குண்டு வெடிப்புகள் நிகழும் அபாயம் உள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.


2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த அரசும் அடிப்படைவாதக் கொள்கையுடையவர்களுக்கு சரியான புனர்வாழ்வு வழங்கவில்லை என்றும், பிரதான சூத்திரதாரியைத் தேடுவதிலேயே காலம் கழிக்கப்படுகின்றது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


யுத்தத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டதால்தான் நாட்டில்நாட்டில் தாக்குதல்கள் இடம்பெறாமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களுக்கு சரியான புனர்வாழ்வு வழங்கி சமூகத்தில் இணைப்பது தேசிய பாதுகாப்பிற்குத் தேவையானது என்றும், இல்லையெனில் நாடு மீண்டும் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0