உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாணவனுக்கு சுமந்திரன் பாராட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரனை, இலங்கைத் தமிழரசுக் கட்சி கௌரவித்துள்ளது.

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவன் திருக்குமரனின் இல்லத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று நேரில் விஜயம் செய்தார்.

இதன்போது, மாணவனின் சாதனையைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போர்த்தி மதிப்பளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக விசேட வாழ்த்து மடல் ஒன்றையும் வழங்கிக் கௌரவித்தார்.

போரால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்திலிருந்து கடின உழைப்பின் மூலம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றமை தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் முன்னுதாரணம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இச்சந்திப்பின் போது மாணவனின் பெற்றோர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0