உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அதிகாலையில் பயங்கரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொ*லை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

காலி – தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில 13 ஏக்கர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால், காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி மற்றும் அவரது பேத்தியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் உயிரிழந்த பாட்டியின் பேத்தியாவார்.

தாக்குதலினால் அவரது ஒரு கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் தெலிகட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் உயிரிழந்த பெண்ணின் மற்றொரு மகளின் கணவர் எனவும், அந்த மகள் தற்போது இத்தாலியில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் உனவட்டுன, தலவெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.

நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எல்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தெலிகடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகரின் பேரில், குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0