உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கடலட்டை பண்ணையாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஆளுநரிடையே முக்கிய கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.04.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைச் செலுத்துவதில் தாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் பண்ணையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தக் குத்தகைக் கட்டணத்தைக் கணிப்பிட்டபோது, கடலட்டையின் சர்வதேச சந்தை விலை வீழ்ச்சி கருத்தில் கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போதைய சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு பொதுவான சூத்திரமொன்றின் ஊடாகக் கட்டணத்தை மீளக் கணிப்பிடுமாறும், அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோர், தற்போதைய கட்டணங்கள் கணிப்பிடப்பட்ட உத்தியோகபூர்வ முறைமை தொடர்பில் பண்ணையாளர்களுக்குத் தெளிவுபடுத்தினர். அத்துடன், கடலட்டைப் பண்ணையாளர்களின் இந்தக் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, மதிப்பீட்டு நடைமுறையை மீண்டும் பரிசீலனை செய்வது தொடர்பில் உரிய துறைசார் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடி ஆவன செய்வதாகப் பதிலளித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் மற்றும் யாழ். மாவட்டக் கடலட்டைப் பண்ணையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0