உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயர்தர பெறுபேற்றில் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

2026.04 01 ஆம் திகதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கமு/ மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலய மாணவர்கள் 75% சித்திகளையும் 08 மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பையும் பெற்று சாதனை படைத்ததுள்ளதுடன் தோற்றிய 20 மாணவர்களுள் 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி எம்.சி. நஸ்லின் றிப்கா அன்ஸார் தெரிவித்தார்.

சாய்ந்தமருது கோட்டத்தில் உள்ள உயர்தர பாடசாலைகளில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்று அதிகூடிய மாணவர்கள் இப் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அதன்படி இம்முறை கலைப்பிரிவில் இருந்து பஸீர் முஹம்மட் அஜீபா 03 A சித்தியும், எம்.ஏ. பாத்திமா தூபா 02A, C சித்தியும், எம்.எப். பாத்திமா ஹன்சுல் நுஸ்பா 02 A, C. சித்தியும், எப். பாத்திமா அப்னா 02A, C சித்தியும், எம். ஆசிபா மெஹ்றூன் 02A, C சித்தியும், எப். பாத்திமா அப்னா 02A, S சித்தியும், ஜே. பாத்திமா றிஸ்பா A,B,C சித்தியும், ஆர். பாத்திமா சிப்னா A,B,C சித்தியும் பெற்று இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய சாதனையை நிகழ்த்திய மாணவர்களையும் உயர்தரப் பகுதியின் பகுதித்தலைவர் ஏ.எம்.அஜ்வத் அவர்களையும் இவர்களை ஊக்கப்படுத்தி, பாடங்களைக் கற்பித்த ஆசிரியர்களான ஏ.எம். அஜ்வத், ஏ.ஆர்.ஏ. அஷ்ரப், எம்.ஐ. பைசால், யூ.எல். அமீர் ஹுசைன், ஏ.எம்.ஜுனைதா, எம்.எப். ஐனுல் மர்சுனா, எஸ். நஜிபுடீன் ஆகியோரையும்
கல்லூரியின் அதிபர் திருமதி. எம்.சி. நஸ்லின் றிப்கா மற்றும் பிரதி அதிபர் திருமதி எம்.எப்.ஐனுல் மர்சுனா, உதவி அதிபர் ஏ.எம்.பறூஸ் அவர்களையும், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என அனைவரும் கல்லூரி சமூகம் சார்பாக பாராட்டி, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இவர்களை மாலை இட்டு வரவேற்று அவர்களுக்கான கௌரவம் வழங்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் நேற்று (02) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0